Feed Item
Added a news 

நகர சபையால் கொட்டப்பட்ட கழிவிற்கு தீ வைத்ததால் தென்னைகள் எரிந்து நாசம் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை!

பருத்தித்துறை நகர சபையால் குடத்தனை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளமையால் நூற்றுகு மேற்பட்ட தென்னம் பிள்ளைகளும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பல பனை மரங்களும் தீயில் கருகியுள்ளன.

அத்துடன் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் வீதியால் மக்கள் செல்ல முடியாதளவு புகைமூட்டமும் காணப்படுகிறது. தீப்பரம்பலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனினும் தீயை அணைப்பதற்குரிய ஏந்தவித நடவடிக்கைகளும் இதுவரை சம்மந்தப்பட்ட எவராலும் ஏடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

பருத்தித்துறை நகரசபையால் குறித்த பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் தமது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதா குடத்தனை கமக்காரர்கள் ஏதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கழுவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகர சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. வைக்கப்பட்ட தீ பல ஏக்கர் அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. எனவே உரியவர்கள் விரைந்து கவனமெடுக்கவும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.

000

  • 935