இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். கால்நடை வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். புதிய முதலீடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சிந்தனைகளின் போக்கில் குழப்பமும், தெளிவின்மையும் காணப்படும். தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனை விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்களின் வழியில் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். பத்திர வழியில் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் வார்த்தைகள் மீதான மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சிம்மம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்த தன்மை குறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். சிறு, குறுந்தொழிலில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உத்தியோகப் பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். மறைமுகமான எதிர்ப்புகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
தாயின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரம் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். பொதுமக்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு
விருச்சிகம்
குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பெருந்தன்மையான செயல்களால் செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடங்களில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களால் லாபம் மேம்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
தனுசு
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடல்நிலையில் இருந்துவந்த சங்கடம் விலகும். கணவன், மனைவியிடையே புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாசம் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
நண்பர்களுக்கிடையேயான நட்பு வட்டம் விரிவடையும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறுதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கும்பம்
நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் சுமுகமாக பழகவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த தொடர்புகளில் கவனம் வேண்டும். நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
- 817