மேஷம்
சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும். விலகிச்சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
மிதுனம்
இழுபறியான பாகப்பிரிவினை கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில அனுபவங்கள் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் உத்வேகமான சிந்தனைகள் பிறக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
குணநலங்களில் சில மாற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். கணவன், மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
கன்னி
மனம் விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். வெளியூர் பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
சகோதரர்களால் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். பொன், பொருள் சேர்க்கையில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் மதிப்பு உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பங்குதாரர்களால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
விருச்சிகம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள் சாதகமாகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் அமையும். சாஸ்திரம் தொடர்பான தெளிவு உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு
நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். முயற்சியில் லாபம் காண்பீர்கள். ஆன்மிகம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் இருந்துவந்த வருத்தம் நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
மகரம்
குழந்தைகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும். மற்றவர்களுடைய செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் மேம்படும். தொழில் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
கும்பம்
சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகள் மூலம் மதிப்பு உயரும். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
- 451