Feed Item
Added a news 

இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) காலை 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது.

இந்த நிலஅதிர்வானது ஆரம்பத்தில் மெக்னிடியூட் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது, பின்னர் அது திருத்தப்பட்டது.

கடல் மட்டத்திலிருந்து 30 கிலோமீட்டர் கீழே, சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபுங் நகரத்திலிருந்து தென்கிழக்கே 62 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 2. 48 அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டது.

இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

000

  • 637