Feed Item
Added a news 

கனடா வேலைவாய்ப்பு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சஸ்கட்ச்சுவான் மாகாணம் மட்டும் வேலைவாய்ப்பில் சாதனையை பதிவு செய்து வருகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மார்ச் மாதத்தில் சஸ்கட்ச்சுவானில் வேலை இல்லாதோரின் விகிதம் 4.9 சதவிகிதமாக இருந்தது. இது மாகாணங்களுக்கிடையே மிகக் குறைவானது. மற்றொரு புறம், தேசிய மட்டத்தில் வேலைவாய்ப்பு விகிதம் சிறிதளவு உயர்ந்து 6.7 சதவிகிதமாக இருக்கிறது.

கனடா முழுவதும் மார்ச் மாதத்தில் சுமார் 33,000 வேலைகள் இழக்கப்பட்டிருந்த நிலையில், சஸ்கட்ச்சுவான் மட்டும் கடந்த மாதத்தில் 6,600 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இது 1.1 சதவிகித உயர்வாகும் மற்றும் நாட்டில் அதிகப்படியான வளர்ச்சி பெற்ற மாநிலமாக விளங்குகிறது.

வேலைவாய்ப்பு அதிகரித்த மற்ற மாகாணங்களில் ப்ரிட்டிஷ் கொலம்பியா, நியூப்ரன்ஸ்விக், நோவா ஸ்கோஷியா, ப்ரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட் மற்றும் நியூஃபவுண்ட்லாந்தும் உள்ளடங்குகின்றன.

  • 394