Feed Item
Added a news 

உலக நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைப்பதற்கான சலுகைகளைப் பரிசீலிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய வரியை எதிர்நோக்கியுள்ள இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயாராகி வரும் நிலையில், அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

10 சதவீதம் என்ற அடிப்படையில் புதிய வரி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சில நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 40 சதவீதத்துக்கும் அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 44 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,

கம்போடியா 49 சதவீத வரியையும், வியட்நாம் 46 சதவீத வரியையும், சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அங்குள்ள முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட 1,200 இடங்களில் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதார பிரச்சினைகள் வரை அமெரிக்க ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் உள்ள குறைகளை, போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் புதிய வரித் திட்டம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்பவற்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் விமர்சித்துள்ளனர்

000

  • 386