Added a news
புதிய வரி கொள்கையால் நாட்டில் வர்த்தக சமநிலையை நியாயமான முறையில் நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளைப் போல முதலீட்டு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வரி மற்றும் வரியல்லாத தடைகளை கவனம் செலுத்தும் மட்டத்திற்குக் குறைப்பதற்கு அரசாங்கம் பங்களிப்பு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கடுமையான வரிக் கொள்கைகளை விதித்துள்ள நிலையில் இலங்கை உட்பட GSP+ வரிச்சலுகை கிடைக்கும் அனைத்து நாடுகளுக்கும் அந்த சலுகை எதிர்காலத்தில் இல்லாமல் போகும் வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
- 289