Feed Item
Added article 

இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட்டு பாடலின் கம்போசிங்கின் போது மணிரத்தினம் முன்பே சொல்லிவிட்டாராம். பாடலின் நடுவே வேகமாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த நாயகி விளக்குகளை ஏந்தி வர வேண்டும், அந்த சூழ்நிலையில் ஏதாவது பதிகம் வருவது போல இருக்க வேண்டும் என மணிரத்தினம் கூறி இருந்திருக்கிறார்.

நான் அதை மறந்து விட்டேன், பாடலின் கம்போசிங்கின் போது இதை மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்தினார் மணிரத்தினம். உடனே எனக்கு அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை உடனே அங்கு இருந்த இசை வாசிப்பாளர்களிடம் உங்களுக்கு தெரிந்த தேவாரம் திருவாசகம் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என நான் கேட்க ஒரு, ஒரு இசைக்கலைஞர் தேவாரத்தில் இருந்து இந்த குனித்த பருவமும் கோவை செவ்வாயில் என்ற பாடலை ஞாபகமூட்டினார் உடனே அந்த பாடலை எழுது என்று சொன்னேன். உடனே அவர் எழுதுகிறார். எழுதியவுடன் கோரஸ் செக்சனை வர வைத்து அந்தப் பாடலை பாட வைத்து, அதன்பிறகு மீண்டும் ராக்கம்மா பாடல் வருமாறு அந்த பாடலை நான் கம்போஸ் செய்தேன் என இசைஞானி கூறியுள்ளார்.

இதை பாம்பேயில் ரெக்கார்டிங் செய்தோம் அங்கிருந்த இசைக் கலைஞர்கள் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர் என இளையராஜா கூறியுள்ளார்.

  • 387