Feed Item
Added a post 

கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன், மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...*

இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.

கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்... குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான்.

இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன...

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார்...

உடனே தேவகி கணவன் வசுதேவன்...

தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்...

கழுதையும் கத்தவில்லை...

கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது

*எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!*

"கர்நாடகாவில் அமிர்தாபுரத்து **அமிர்தேஷ்வரர்* கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம்👇 உள்ளது".

  • 454