கார் லைசென்ஸ் கேட்டு டெஸ்ட்டுக்கு போனாங்க ஒரு அம்மா .....
அப்ப அதிகாரி அந்த அம்மா கிட்ட ஒரு கேள்வி கேட்டார் ....
" ஏம்மா நீங்க காரை வேகமா 120 கிலோமீட்டர் வேகத்தில் போறீங்க திடீர் என்று ஒரு வளைவில் எதிரில் ஒரு லாரியும் பஸ்ஸும் மெதுவாக போய் கொண்டிருக்கு !
உங்கள் வலது புறத்தில் ஒரு பெரிய மரம் இருக்கு...
இடது புறத்தில் ஒரு பெரியவர் நின்று கொண்டு இருக்கார் ....
இப்ப எதன் மேல் மோதி நிறுத்துவீர்கள் ...
அந்த சட்டென்று சார் நான் மரத்தின் மீது மோதுவேன் என்றார்கள் ...
அதிகாரி அந்த அம்மாவை போய் நன்றாக வண்டி ஓட்ட பழகி கொண்டு மூன்று மாதம் கழித்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.
அந்த அம்மாவும் அதே மாதிரி மூன்று மாதம் கடந்து வந்தார்கள் ...
அதிகாரி அதே கேள்வியை கேட்க .. அந்த அம்மா ஒரு பதிலை சொல்ல மறுபடியும் மூன்று மாதம் கடந்து வர சொல்ல...
இப்படியே 4 தடவை சென்றது..
நான்காவது முறை அந்த அம்மா கோபத்துடன்.
சார் உங்கள் கேள்விக்கு என்ன தான் பதில் ஏன் எனக்கு லைசென்ஸ் தர மறுக்கிறீர்கள் என்று கேட்க...
அதிகாரி சிரிக்காமல் பதில் சொன்னார்...
அம்மா முதல் தடவை மரத்தின் மேல் மோதுவேன் என்றீர்கள்..
இரண்டாவது தடவை பெரியவர் மேல் ,
மூன்றாவது முறை லாரி மீதும்
4 ஆவது முறை பஸ் மீதும் மோதுவேன் என்று சொன்னீர்கள்.
ஒருவாட்டியாவது நான் பிரேக் போடுவேன் என்று சொல்லவே இல்லையே...............
- 266