Added article
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, மாதவனுடன் எதிரி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவங்கள் பற்றி கூறியிருந்தார்.
கே எ ஸ் ரவிக்குமாரிடம் வரும் மாதவன், என்ன சார் நீங்களும் மணிசாரும்ம் ஒரே மாதிரி இருக்கீங்களே என நொந்து கொள்வாராம், அதற்கு கே.எஸ். ரவிகுமார் என்ன மேடி நீ, நானும் மணி சாரும் ஒன்னா அவர் எவ்வளவு பெரிய இடத்தில் இருக்காரு,நானும் மணி சாரும் ஒண்ணா அவர் எடுக்குற படங்கள் என்ன நான் எடுக்குற படங்கள். என்ன என சொல்லி இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த மாதவன், சார், அவரும் நீங்களும்,திட்றதுல ஒரே மாதிரி சார் என்ன சொன்னாராம். இதை ஜாலியாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கே எஸ் ரவிக்குமார்.
- 296