Feed Item
Added a news 

வலிகாமம் மேற்கில் நடைபெற்ற தந்தை செல்வா விருது வழங்கல் வழங்கல் நிகழ்வில் உதவி திட்டங்கள் வழங்கிய பொழுது தேர்தல் விதிமுறைகளை மீறி நிகழ்வில் வேட்பாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்து வட்டுக்கோட்டை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரால் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் திணைக்களம் நிகழ்வின் இறுதி பகுதியில் குறித்த இடத்திற்கு விரைந்த பொழுது கட்சியை பிரதான படுத்தும் கொடிகளும் வேட்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக முறைப்பாட்டளரால் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து களநிலலமைகளை ஆராய்ந்த தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் இது குறித்து வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் செயலருக்கு அறிவித்துள்ளதாகவும் நாளைய தினம் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்து சென்றார் .

  • 676