Added a post
ஒருசமயம், திறந்தவெளி பொதுக்கூட்டம் ஒன்றில், ஜவஹர்லால் நேரு பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்தது. ஆனால், கூட்டத்தினர் கலையாமல், நேருவின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஒருவர் ஓடி வந்து, நேருவின் தலைக்கு மேல் குடையை பிடித்தார்.
உடனே, 'மக்கள் நனைந்து கொண்டிருக்கும் போது, எனக்கு மட்டும் குடை எதற்கு? வேண்டாம்...' என்றார், நேரு.
ஆனால், அந்த நபர் தொடர்ந்து குடை பிடித்தபடி இருந்தார்.
அப்போது, 'இவர் எனக்கு தொடர்ந்து குடை பிடிப்பதைப் பார்த்தால், 'மைக்'கின் சொந்தக்காரராக இவர் இருப்பார் என, நினைக்கிறேன். இவர் எனக்கு குடை பிடிக்கவில்லை. இந்த, 'மைக்' நனைந்து விடாமல் இருக்கவே குடை பிடிக்கிறார்...' என்றார், நேரு.
அதை கேட்டு குடை பிடித்தவர் உட்பட, கூட்டத்திலிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
- 558