போலி ஆவணத்தைக் கொண்டு மயானத்தை வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதேசவாசி ஒருவரின் சடலத்தை புதைப்பதற்கு நேற்று மக்கள் மயானத்திற்கு சென்ற போது வர்த்தகர் அவர்களை விரட்டியடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதிலேயே இநந்த விடயம் தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணம், சுழிபுரம், திருவடிநிலை பிரதேசத்தில் அமைந்துள்ள மயானம் தொடர்பிலேயே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன் போது வர்த்தகர் யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச சபையால் இந்த மயானம் தமக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் கடிதம் ஒன்றை காண்பித்துள்ளார்.
பிரதேச சபையால் பொலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு அந்த காணி வர்த்தகர் ஒருவருக்கு விற்னை செய்துள்ள போதிலும் அது தொடர்பில் பிரதேசத்திலுள்ள எந்தவொரு சங்கத்திற்கும் பிரதேச சபை அறிவிக்கவில்லை என யாழ்ப்பாணம், சுழிபுரம், திருவடிநிலை பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இந்தக் காணி உரிய பிரதேச சபையின் கீழுள்ள மயானம் என எபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது தொடர்பில் பிரதேச சபையின் அதிகாரிளுக்கு எதிராக கடிதம் ஒன்று உரிய அதிகாரிகளிடம் கையளிப்பதற்கு பிரதேசத்தின் அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
இதேநேரம் இந்த மயானத்தில் இதுவரை 137 கல்லறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கல்லறைகள் அனைத்தையும் உடைத்துவிட்டு காணியில் சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணிக்கும் நோக்கிலேயே தான் இதனை கொள்வனவு செய்ததாக வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் கடும் அசௌகரியமான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
000
- 610