Feed Item
Added a news 

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பணிகள் 1066 மதிப்பீட்டு மையங்களில் எதிர்வரும் முதலாம் திகதிமுதல் 10 ஆம் திகதி வரை நடைபெறும்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 16000 ஆசியிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை கடந்த 17 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

000

  • 512