மேஷம்
குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் நீடிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் உழைப்புகள் மேம்படும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் ஏற்படும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
ரிஷபம்
சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிதுனம்
வியாபாரத்தில் அறிமுகம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் தெளிவுகள் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். நீதித்துறைகளில் புதிய அனுபவம் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் நிலவும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிந்தனைப் போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
மனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்து வந்த ஆசைகள் நிறைவேறும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். காதணிகள் சார்ந்த செயல்களில் ஈடுபாடுகள் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தடங்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்
விருச்சிகம்
வியாபாரம் நிமித்தமாக சில நுட்பங்களை புரிந்துகொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். சமயோசிதமாக செயல்பட்டு நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். குடும்ப விஷயமாக அலைச்சல் உண்டாகும். நிலுவையில் இருந்து வந்த வரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சகோதர வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். சிலர் நகை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்களில் தனித்திறமை வெளிப்படும். கொடுக்கல், வாங்கலில் உண்டான சங்கடம் தீரும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
எந்த செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அலுவலக ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
- 881