Feed Item
Added a post 

மேஷம்

ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்தி சாதுரியத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட செயலை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்

ரிஷபம்

வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் காணப்படும். பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். மாணவர்களின் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிதுனம்

வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். தனவரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக்கொள்ளவும். புதிய முயற்சிகளை செயல்படுத்துவதில் கவனம் வேண்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வகையில் சிறு வேறுபாடுகள் ஏற்படும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். இணைய வர்த்தக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் அறிமுகம் மேம்படும். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். மற்றவருக்கு உதவுவது திருப்தியை தரும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கன்னி

காப்பீடு துறைகளில் ஆதாயம் மேம்படும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணி தொடர்பாக வெளியூர் பயணங்கள் கைகூடும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

துலாம்

குழந்தைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வரவுகள் மேம்படுத்துவது தொடர்பான எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சிந்தனை திறனில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்

விருச்சிகம்

மனதளவில் உற்சாகம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாய பணிகளில் அரசு உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை

தனுசு

மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். நினைத்த எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

மகரம்

நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவார்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் விலகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்கள் நட்பால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

கலை பணிகளில் ஆர்வம் உண்டாகும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். மனம் விட்டு பேசுவதால் அமைதி உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்து நிதானமாக செயல்படவும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தொழில் நுட்ப தேடல் உண்டாகும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கி தரும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மீனம்

விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். சுதந்திர மனப்பான்மை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 678