Feed Item
Added a news 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் (Pope Francis) உடல்நலம் சீராகி இன்றையதினம் (23) வீடு திரும்பியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி சுவாசப் பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, ஐந்து வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றையதினம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் இயக்குநர் செர்ஜியோ அல்பெய்ரி கூறுகையில், "போப் உடல்நிலை சீராக உள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து திரும்பினார். எனினும், அவர் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். அத்துடன், அதிக மக்கள் நிரம்பிய சந்திப்புகளையோ அல்லது அவரை சோர்வடையச் செய்யும் சந்திப்புகளையோ பிரான்சிஸ் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  • 619