Feed Item
Added article 

அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்தனர். அதற்கு ஏற்ற போல், படக்குழு தரப்பில் இருந்தும் 'இட்லி கடை' திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியான (Idli Kadai' Release Delayed). எனவே ' இட்லி கடை' ரிலீஸ் தள்ளி போவதற்கு அஜித்தின் படம் தான் காரணம் என சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவிய நிலையில், இதற்கு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும் போது, சில நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், 90% சதவீத படபிடிப்புகள் முடிந்து விட்டது. படம் நன்றாக வந்துள்ளது. எனவே அவசரப்பட வேண்டாம் என இந்த படத்தின் ரிலீஸை தற்போது தாமதப்படுத்தி உள்ளோம். இன்னும் பத்து நாட்களில் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 792