Feed Item
Added a post 

1896 ஆம் ஆண்டில், மின்சார விளக்கைக் கண்டுபிடித்த சிறந்த கண்டுபிடிப்பாளரான தாமஸ் எடிசன், ஒரு காரை வடிவமைக்கும் யோசனையில் வேலை செய்து கொண்டிருந்தார், அவர் தம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் ஒரு சோதனை காரை உருவாக்கி இருப்பதைக் கேள்விப்பட்டார்.

எடிசன் அந்த இளைஞனை நியூயார்க்கில் நடந்த தனது நிறுவனத்தின் பார்ட்டியில் சந்தித்து கார் பற்றி கேட்டறிந்தார். அவர் அவனது ஐடியாக்களால் ஈர்க்கப்பட்டார்! அந்த இளைஞனைப் போலவே அவருக்கும் ஒரு காரை வடிவமைக்கும் அதே யோசனை இருந்தது. எடிசன் மின்சார ஆற்றல் மூலமாக அந்த காரை இயக்கும் ஐடியாவில் இருந்தார், ஆனால் அந்த இளைஞன் காரை இயக்குவதற்கு பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்தப்போதாக கூறினான். அவர் ஆச்சர்யத்தில் தனது கையை மேஜை மீது குத்தி, "இளைஞரே, அபாரம், உண்மையில் உனது யோசனை சிறப்பானது. வெற்றிக்கான விஷயங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளது! நீங்கள் பெரிய வெற்றி பெறுவீர்கள்" என்றார்.

அந்த நேரத்தில் அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்படும், கொண்டாடப்படும் கண்டுபிடிப்பாளரின் இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகளால், ஹென்றி ஃபோர்டு தனது வேலையைத் தொடர்ந்தார், ஒரு காரைக் கண்டுபிடித்தார், பிறகு ஒரு கார் தொழிற்சாலையை தொடங்கினார். பெரும் பணக்காரர் ஆனார்.

டிசம்பர் 9, 1914 அன்று, எடிசனின் ஆய்வகம் மற்றும் தொழிற்சாலை தீக்கிரையானது. அவர் 67 வயதானவர் மற்றும் காப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை. எறியும் சாம்பல் அடங்கும் முன், ஹென்றி ஃபோர்டு 7,50,000 டாலர்களுக்கான காசோலையை எடிசனிடம் கொடுத்தார், உங்களுக்கு மேலும் தேவைப்பட்டாலும் உதவ நான் இருக்கிறேன், என்று கூறிச் சென்றார்.

1916 ஆம் ஆண்டில், ஹென்றி ஃபோர்டு தனது வீட்டை எடிசனின் வீட்டிற்கு அடுத்த கட்டிடத்திற்கு மாற்றினார், சிறிது காலத்தில் எடிசன் நடக்க முடியாமல் சாய்வு நாற்காலியில் அவரது மருத்துவர்களால் உட்கார வைக்கபட்டபோது, ஹென்றி ஃபோர்டு தனது வீட்டில் ஒரு சக்கர நாற்காலியை வாங்கினார், தனது நண்பர் மற்றும் வழிகாட்டிக்காக, அவர் அங்கும் இங்கும் நகர வேண்டும் என்பதற்காக தமது வீட்டில் பெரிய அறையை நிறுவினார்.

எடிசன், ஹென்றி ஃபோர்டுக்கு தனது பலத்தை உணர்த்தினார், தன்மீது ஹென்றிக்கு நம்பிக்கை வர காரணமாக இருந்தார். அதனால் வாழ்நாள் முழுவதும் தமக்கான ஒரு நல்ல நண்பரைப் பெற்றார்!

பாடம் :

மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள். உங்களால் பந்தயத்தில் வெற்றிபெற முடியாவிட்டால், சாதனையை முறியடிக்க உங்களுக்கு முன்னால் ஓடுபவர்களுக்கு உதவுங்கள்! உங்கள் மெழுகுவர்த்தி மற்றொரு மெழுகுவர்த்தியை ஏற்றும்போது அதன் ஒளியை இழக்காது!

  • 769