Feed Item
Added a post 

டாக்டர் இன்னும் ஆறு லட்சம் தாரேன் பழையபடியே மாற்றி விடுங்கள்.

ஒரு விபத்தில் மனைவி பேசும் சக்தியை இழக்க கணவன் போகாத கோவில் இல்ல. பார்க்காத மருத்துவம் இல்ல.

ஒரு வழியாக தேடி தேடி ஒரு மருத்துவரை சந்திக்க அவர் தம்பி ஆறு லட்சம் ரெடி பண்ணு . உன் மனைவி பேச இல்ல குயில் மாதிரி பாட வைக்க முடியும் என்னால் என்று சொல்ல.

அவன் கடன உடன வாங்கி ஆறு லட்சம் ரெடி பண்ணி. வெற்றிகரமாக ஆபரேசன் முடிந்தது.

கணவன் மருத்துவமனை சென்று மனைவி பார்க்க சென்றான்.

டாக்டர் . அவனிடம் ஒரு பத்து நிமிடம் பொறுங்கள் உங்கள் மனைவி பாட ஆரம்பிப்பார்கள் ஸாரி பேச ஆரம்பிப்பார்கள் என்று சொல்ல .

கணவன் ஆடையாக பத்து நிமிடம் கழிந்து போயி மனைவியை பார்க்க.

மனைவி பேச ஆரம்பித்தார். இல்லை பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.

பத்து வருடம் பேசாமல் இருந்த குறையை பத்து நிமிடத்தில் பொரிந்து தள்ளி விட்டார்.

" நீ எல்லாம் ஒரு மனிதனா? உன்னைக் கல்யாணம் பண்ணி என்ன சுகம் கண்டேன். நகை உண்டா? வீடு வாசல் உண்டா ஒன்னும் இல்லை என்று புலம்பி தள்ள?

மயக்கம் வந்தவனாய் டாக்டரிடம் ஓடோடி வந்து டாக்டர் இன்னும் கடன் வாங்கி ஒரு ஆறு லட்சம் தாரேன் எப்படியாவது என் மனைவியை ஊமை ஆக்குங்க. என்று கெஞ்ச.

டாக்டர் அதெல்லாம் முடியாது.

உன் ஆறு லட்சம் வேண்டாம் ஒரு அம்பதாயிரம் கொடு பேசாமல் உன்னை செவிடாக்கி விடுகிறேன் என்று சொல்லி.

உடனே ஆபரேசன் செய்து முடித்தார்.

அப்புறம் என்ன மகிழ்ச்சி தான்.

  • 805