Feed Item
Added article 

தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ஷிகான் ஹுசைனி. பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு நடிகராக அறியப்பட்ட போதும் இவரது தொழில் கராத்தே சொல்லிக் கொடுப்பதுதான். தொலைக்காட்சிகளில் பெண்கள் தற்காப்பு குறித்து இவர் தொடர்ந்து நடித்துக் காட்டிய பயிற்சி வீடியோக்கள் வெகு பிரபலம்.

ஹுசைனி சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருந்தார். அது தான் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான். அவர் வெளியிட்ட அறிக்கையில் “நான் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு தினமும் 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப்படுகிறது. அதனால் நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன்.” எனக் கூறியிருந்தார். அவரது சிகிச்சைக்காக தமிழக அரசு 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தது.

ஹுசைனி தன்னுடைய மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக தானமாக அளித்துள்ளார். ஆனால் தன்னுடைய இதயத்தை மட்டும் பாதுகாப்பதற்காக தன்னுடைய கராத்தே மாணவர்களிடம் அளிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

  • 862