Feed Item
Added a news 

இன்று அதிகாலை வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று ஹையேஸ் ரக வாகனத்தில் விபத்துள்ளாகி இறந்துள்ளது.

வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று இன்று அதிகாலை 12:30 மணியளவில் நீர்கொழும்பு, யாழ்ப்பாண வீதியில் சென்ற ஹையேஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அந்த குட்டி யானை இறந்துள்ளது. இருப்பினும் வாகனத்தில் சென்றவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

தற்பொழுது விவசாய அறுவடை காலமென்பதனால் யானைகள் வயல்கள் மற்றும் நீரோட்டம் உள்ள குளங்களிற்கு செல்வதற்கு பல இடங்களில் பிரதான வீதியை கடந்து கூட்டம் கூட்டமாக செல்கின்றன.

ஆகையினால் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் உன்னிப்பாகவும் மிக அவதானத்தோடும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

000

  • 723