Feed Item
Added a post 

ஒரு கல்யாண வீட்டு ( buffet) பஃபே முறையில் திருமண விருந்து நடந்து கொண்டிருந்தது அங்க குலாப் ஜாமுன் தர்றவரு வாங்கிட்டு போற குட்டி பசங்க அத்தனை பேருக்கும் சந்தன பொட்டு வைத்து அனுப்பி கொண்டிருந்தார்

நம்ம வாய் சும்மா இல்லாம பரவா இல்லையே வரவேற்ப்பில் தான் சந்தனம் கல்கண்டு தந்து இன்வைட் செய்யுராங்க நீங்க கூட இவ்வளவு பாந்தமா அதுவும் குழந்தைகளுக்கு உபசரிப்பு செய்யுறீங்களேன்னு கேக்க

அவர் சொல்றார் அட நீங்க வேற மேடம் மொத்தம் 600 பேருக்கு குலாப் ஜாமுன் கணக்கு தான் சில குட்டி பசங்க திரும்ப திரும்ப வந்து வாங்கிட்டு போயிடராங்க என்னோட மேனேஜர் என்னை தான் கேள்வி கேட்கிறார் அதான் இந்த ஐடியாவை ஃபாலோ பண்றேன் என்று சொன்னார்.

  • 362