Feed Item
Added a news 

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 412 வீதி விபத்துக்களில் 431 பேர் உயிரிழந்தனர். அந்த காலப்பகுதியினுள் நாடளாவிய ரீதியாக 925 பாரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொலிஸ் அறிக்கைகளுக்கு அமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

000

  • 607