Feed Item
Added a post 

மனைவி - நைட்டு என்ன சமைக்கட்டும் ங்க..??

கணவன் ~ சப்பாத்தி,சன்னா மசாலா...

மனைவி - இன்னைக்கு ரெம்ப டையேர்டா இருக்கு தோசையே செஞ்சிட்றேன்.

கணவன் - அப்றம் ஏன்டா என்கிட்ட கேட்ட..?!

மனைவி - நீங்க என்ன சொல்றிங்கன்னு பாக்கதான்...

கணவன் - சரி... சரி...

(ஒரு மாதிரி ஏமாற்றம் தெரிந்தது..)

மனைவி - சரி... தோசைக்கு தொட்டுக்க சட்னி வைக்கவா..?! இல்லை சாம்பார் வைக்கவா..?!

இல்லன்னா சட்னி,சாம்பார் ரெண்டும் சேர்த்து வைக்கவா..?!இல்ல இட்லி சாம்பார் மற்ற வைக்கவா..?! இல்ல உங்களுக்கு பிடித்த பருப்பு சாம்பார் வைக்கவா..?!

இல்லன்னா தக்காளி சாம்பார் வைக்கவா..?!வெங்காய சாம்பார் வைக்கவா..?!காய்கறி சாம்பாரா..?!

இல்ல தேங்கா சட்னி அறைக்கவா..?!

வத்தல் மிளகாய் சட்னி அறைக்கவா..?!

பச்ச மிளகாய் சட்டினியா..??

பொட்டு கடல சட்னியா..?!

நிலகடல சட்னியா...?!

கணவன் - நில்லு... ஒரு சாம்பார்ல பருப்பு தக்காளி வெங்காயம் காய்கறி எல்லாம் தான போடுவ..??

மனைவி - ஆமா...

கணவன் - அப்றம் என்ன..??

என்னமோ வெரைட்டியா சமைக்கிற மாதிரி ஒரே சாம்பாரை ஏழு விதமா கேக்குற...?!

அதே மாதிரி சட்டினிக்கு தேங்காய் பொட்டு கடல பச்ச மிளகாய் தானே போடுவ...

இல்லன்ன பச்ச மிளகாய்க்கு பதிலா வத்தள் மிளகாய் போடுவ..

இல்ல பொட்டு கடலைக்கு பதிலா நிலக்கடலைய போடுவ...

இப்ப நீ என்னமோ மெனக்கெட்டு புதுசா சமைக்க போறவளாட்டம் பிரிச்சு பிரிச்சு கேட்டுட்ருக்க..?!

அதாவது நீ நிறைய வெரைட்டியா பண்ற மாதிரி நா நினைக்கனும் அதான..?!

மனைவி ~ ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்...சத்தமா பேசாதிங்க...

கணவன் - ஏன்... ஏன்...?!

மனைவி - நா நம்ம குழந்தை கிட்ட தினம் இப்டிதான் கேட்பேன்.. இல்லன்னா அவுங்க எப்பவும்

ஒரே சாம்பார்... ஒரே சட்டினின்னு சளிச்சிக்கிறாங்க...

கணவன் - !!!!!!!!!!!!!!!!!

  • 699