Feed Item
Added a post 

மேஷம்

குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களின் ஆலோசனைகளால் சிக்கல்கள் குறையும். உறவுகளின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுகள் மேம்படும். வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பங்குதாரர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்புகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். திறமைக்குண்டான மதிப்புகள் உருவாகும். விவசாய பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு

மிதுனம்

அக்கம் பக்கம் ஆதரவாக இருப்பார்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். இனம் புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகளால் புதுமைகளை உருவாக்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்

கடகம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். வெளி உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் புதிய முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

சிம்மம்

புதிய கலைகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்

கன்னி

எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சற்று நிதானத்துடன் செயல்படவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். இறை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்

துலாம்

மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். சகோதரர் வகையில் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சுபகாரியங்களில் பொறுப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் வேலை ஆட்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

விருச்சிகம்

மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அதிரடியான செயல்கள் மூலம் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். சக ஊழியர்களின் ஆதரவுகள் திருப்தியை ஏற்படுத்தும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

எதிலும் ஆர்வம் இன்றி செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைப்பது நல்லது. புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம்

உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களால் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மீனம்

வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். இனம் புரியாத கவலைகளால் சோர்வுகளும், தாமதமும் ஏற்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். விருந்தினர்களின் வருகையால் சுபச்செலவுகள் ஏற்படும். எதிலும் அவசரம் இன்றி நிதானமாக செயல்படவும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை

  • 505