Feed Item
Added a post 

மகளுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ததைப் போன்று தந்தையும் தனது தலைமுடியை மழித்துக் கொண்டு அறுவை சிகிச்சைக்கான தடங்களை ஏற்படுத்திக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பெண் குந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதனால் அந்தக் குழந்தையின் தலையில் உள்ள முடிகளை மழித்து விட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது அந்த குழந்தை நலமுடன் அதில் இருந்து மீண்டு வந்த நிலையில், அந்தக் குழந்தையின் தலையில் அறுவை சிகிச்சைக்கான தையல் தடங்கள் மட்டும் அப்படியே இருக்கிறது.

இதைக் கண்ட அந்த குழந்தையின் தந்தையும் மகளைப் போன்று முடிகளை வழித்து விட்டு அறுவை சிகிச்சைக்கான தடயங்களை தனக்கும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தது குறித்து எதுவும் தெரியக் கூடாது என்பதாலும், அதை நினைத்து அந்தக் குழந்தை வருந்தக் கூடாது என்பதாலும் இப்படி ஒரு பாசமிகு செயலை அந்த தந்தை செய்துள்ளார். எந்த வகையிலும் தமது குழந்தை மனதளவில் பாதித்து விடக் கூடாது என்பதை அந்த தந்தை சிந்தித்துள்ளார் என்பதையே இந்த செயல் காட்டுகிறது. இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதுடன் அதிகமான கமெண்டுகளையும், லைக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனதை நெகிழச்செய்த அந்த புகைப்படத்தைப் பாருங்கள்..

  • 428