ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடரை அயர்லாந்து கைவிட்டுள்ளது.
நிதி காரணங்களால் குறித்த போட்டி கைவிடப்பட்டுள்ளதென கிரிக்கெட் அயர்லாந்து அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணை கிரிக்கெட் அயர்லாந்து நேற்று வெளியிட்டது.
இதன்படி, எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகள் ஆடவர் அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் அடங்கிய தொடரை அயர்லாந்து நடத்தவுள்ளது.
அத்துடன் அயர்லாந்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இங்கிலாந்து ஆடவர் அணி இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்றில் விளையாடுமென கிரிக்கெட் அயர்லாந்தின் போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியல் காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டிகள் இரத்து செய்யப்படவில்லை என கிரிக்கெட் அயர்லாந்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வோரன் டியூட்ரோம் தெரிவித்துள்ளார்.
00
- 303