Feed Item
Added a news 

ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளதும் கடற்படைகள் தென் கிழக்கு ஈரான் கடற்பரப்பான வடக்கு இந்து சமுத்திரத்தில் இன்று கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.

ஈரானின் தென் கிழக்கு துறைமுக நகரான சபாஹர் கடற்கரைப் பகுதியில் இப்பயிற்சி இடம்பெறுகிறது.

இப்பயிற்சியில் ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் கடற்படைகளும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படையும் அவற்றின் போர்க்கப்பல்களும், தளவாடக் கப்பல்களும் பங்குபற்ற உள்ளன.

பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பலதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவித்தல், உலக அமைதியைப் பாதுகாத்தல், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பொதுவான எதிர்காலத்துடன் கடல் சார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கான பங்கேற்பாளர்களின் திறன்களை வெளிப்படுத்துவதை இப்போர்ப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது ஈரானிய பாதுகாப்பு தரப்பினர் என தெரிவித்துள்ளனர்

  • 465