விறகு வெட்டி ஆற்றோரம் விறகு வெட்டும் போது கோடாலி ஆற்றில் விழ ஒரு வன தேவதை முதலில் தங்க கோடாலி கொடுக்க, அவன் அது இல்லை என்று சொல்ல வெள்ளி கோடாலி கொடுக்க அதுவும் இல்லை என்று சொன்னவுடன் அவனுடைய இரும்பு கோடாலியை கொடுக்க அவன் அதுதான் என்று சொல்ல வன தேவதை அவன் நேர்மையை பாராட்டி மூன்று கோடாலியையும் அவனிடமே கொடுத்ததாம்.
மூன்று கோடாலியை எடுத்து கொண்டு அவன் வீட்டுக்கு செல்ல! அங்கே அவன் பெஞ்சாதி ஏது இந்த தங்கம் மற்றும் வெள்ளி கோடாலி என்று கேட்க அதற்கு அவன் வன தேவதை கொடுத்தது என்று சொல்ல !
மனைவி யார்கிட்ட காதில் பூ சுற்றுகிறாய் என்று சொல்லி, அதெல்லாம் எனக்கு தெரியாது நீ அந்த வன தேவதையை காட்டு என்று சொல்ல, சரி என்று சொல்லிட்டு வன தேவதை இருக்கும் இடத்திற்கு கூட்டி சென்றான்.
மனைவியிடம் நீ ஆற்றோரம் இருக்கும் மரத்தின் பக்கத்தில் ஒளிந்து கொள் நான் முன்பு போல் கோடாலியை ஆற்றில் தவற விட்டால் அந்த வன தேவதை வரும் அப்புறம் நீ பேசி கொள்ளலாம் என்று மனைவியிடம் சொன்னான்.
அவளும் அதே மாதிரி ஒளிந்து கொள்ள திடீர் என்று கால் தவறி ஆற்றில் விழுந்து விட்டாள்.
இவன் இப்போ ஐயோ ! என் மனைவியை காப்பாற்று என்று கத்த!
அப்ப அங்கு வந்த வன தேவதை என்று விசயத்தை கேட்டு விட்டு ஆற்றின் உள்ளே சென்று முதலில் நயன்தாராவை கூட்டி வந்து விறகு வெட்டி கிட்ட வந்து இந்தா உன் மனைவி என்று சொல்ல!
விறகு வெட்டி ஆமாம் இதுதான் என் மனைவி என்று சொல்ல!
அதற்கு என்னப்பா நேற்று நல்லவனா இருந்த இன்னைக்கு மாறி விட்டே என்று கேட்க.
விறகு வெட்டி சொன்னான் ! உன்னை பற்றி எனக்கு தெரியும் நீ முதலில் அழைத்து வந்த நயன்தாரா இல்லை என்று சொன்னால் அப்புறம் நீ சமந்தாவை அழைத்து வருவே! நான் அவரும் இல்லை என்று சொன்னால் !
கடைசியாக என் மனைவியை கூட்டிட்டு வருவே! ஆமாம் என்று சொன்னால் மூன்று பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ! என்று சொல்லி விடுவே.
ஏற்கனவே ஒன்னை கட்டிகிட்டு நான் படுற கஷ்டம் உனக்கு எங்க தெரியும் என்றான்.
- 560