Feed Item
Added a post 

அகத்திய மாமுனிவர் ஸ்ரீ சக்ரம் அமைத்த ,இந்த ஊத்துமலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில், மருத்துவ குணங்கனால் கொண்ட சுனைகளும் அரிய வகை மூலிகையாலும் நிரம்பிய திருத்தலம்.

சித்தர் பெருமக்களால் உருவாக்கப்பட்ட மூலிகை ஊற்றுநீர், இன்றும் வற்றாத மூலிகை நீராக மக்களின் நோய்களைத் தீர்த்துக் கொண்டுள்ளது. சப்தசாகரம் என்றழைக்கப்படும் ஏழுவிதமான மூலிகைகள் கலந்த சுனைகள், தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்களைப் போக்கும் ஆற்றலுடையதாக திகழ்கிறது.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்லும்படி இந்த ஊத்துமலை முருகன் கோயில் மூன்று நிலைகளை கொண்டதாக அமைந்து உள்ளது.

இம் மலையை சுற்றி ஸ்கந்தகிரி, நாமகிரி, குமரகிரி, பத்மகிரி என மலை வளம் நிறைந்த இந்த ஸ்தலம், நோய் தீர்க்கும் அற்புத தலமாக அமைந்து உள்ளது.

அகத்தியர் உட்பட பதினெண் சித்தர்களும் வழிபட்ட இடம், ஸ்ரீசக்ரம், மூலிகை சுனை, மூலிகை வனம், மலை மீதமர்ந்த திருக்கோயில் என பல சிறப்புகளை கொண்ட இந்த ஊத்துமலை முருகன் கோயில் சேலம் , சீலநாயக்கன் பட்டி என்ற ஊருக்கு அருகில் உள்ளது,

  • 570