Added a post
- 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
- இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அகவுள்ளார். சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்
- சனி பகவான் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். சனி பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவான் ஏப்ரல் மாதம் உதயமாவார். தற்போது மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ள சனி பகவான் அந்த ராசியிலேயே உதயமாவார்.
சனி உதயம்
- சனி பெயர்ச்சிக்கு பின் நிகழவுள்ள சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும்.
- மற்றும் சனி உதயத்தின் தாக்கத்தால் சனி பகவானின் முழுமையான ஆசிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் தொடர்ந்து முன்னேறும். பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்கலாம். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
ரிஷப ராசி
- ரிஷப ராசிக்கு 11 இல் லாபத்தில் சனி பகவான் வருகிறார். ரிஷபத்துக்கு சுக்கிரன் அதிபதியாக உள்ளார். சுக்கிரனும், குருபகவானும் நட்பு கிரகங்கள். கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலத்துக்குச் சென்று வருவது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.
- பெற்றோர், ரத்த பந்த உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் பெரியோரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் அவர்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
மிதுனம்:
- மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியும் அதன் பின் வரும் சனி உதயமும் அதிக அளவில் நன்மை பயக்கும். நிதி நிலை முன்னேறும்.
- பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய முதலீட்டிலிருந்து திடீரென்று நிதி லாபம் கிடைக்கக்கூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மகரம்:
- சனி பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி பகவானின் உதயத்தால், மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். இதன் காரணமாக மிகப்பெரிய அதிர்ஷ்டம் இவர்களுக்கு கிடைக்கும்.
- செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
சனி பகவானின் பரிபூரண அருள் பெற
- நீதி தேவரனான சனி பகவானின் பரிபூரண அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.
- நீதி தேவரனான சனி பகவானின் பரிபூரண அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.
- 564