Feed Item
Added a post 

பகவான் கிருஷ்ணன் ஒருநாள் தருமனையும், துரியோதனனையும் தன்னருகே அழைத்தான்!

"உங்கள் இருவருக்கும் ஒரு வேலை தரப்போகிறேன்! அதை நிறைவேற்றி தரவேண்டும்" என்றான்!

என்னவென்று வினவியபோது..

"தருமா, நீ இன்று மாலைக்குள் ஒரு கெட்ட மனிதனை என்னிடம் அழைத்து வா" என்றான்.

பிறகு துரியோதனனை பார்த்து " துரியோதனா, நீ இன்று மாலைக்குள் ஒரேயொரு நல்ல மனிதனை என் முன்னே கொண்டு வந்து நிறுத்து" என்றான்!

இருவரும் புறப்பட்டார்கள். மாலையும் ஆனது.

இருவருமே யாரையும் அழைக்காமல் வெறுங்கையோடு வந்து கிருஷ்ணன் முன்னால் நின்றார்கள்.

"என்ன ஆச்சு ஏன் யாரையும் அழைத்துவரவில்லை?" என்று கேட்டான் கண்ணன்.

"கண்ணா... உலகம் மிகவும் மோசமாகிவிட்டது. ஒருவர் கூட நல்லவராக இல்லை.. நானும் நாள் முழுக்க தேடிப்பார்த்துவிட்டேன்" என்றான் துரியோதனன்.

"நீ சொல் தருமா" என்று கேட்டான் கிருஷ்ணன்.

"கண்ணா.. உலகம் எவ்வளவு அழகானது! நான் கண்ட மனிதர்கள் எல்லாம் அத்தனை நல்லவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஏதேனுமொரு நல்ல குணம் இருக்கிறது. கெட்டவர்கள் என யாருமே இல்லை" என்றான் தருமன்.

கண்ணன் சிரித்தபடி சொன்னான்... "தருமா, துரியோதனா.. உங்கள் கண்கள் வழியே இந்த உலகை பார்க்கும்போது உங்கள்

மன எண்ணங்கள் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

துரியோதனன் மனதில் #கெட்ட எண்ணங்கள் நிறைந்துள்ளதால் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் கெட்டவர்களாகவே தெரிந்தார்கள். அதனால் அவனால் ஒரு நல்லவனைக்கூட கூட்டி

வர முடியவில்லை!

ஆனால் தருமனோ, தனது மனம் முழுக்க நல்ல எண்ணங்களை கொண்டவனாதலால், பார்க்கும் மனிதர்கள் அத்தனை பேரும் நல்லவர்களாகத் தெரிந்தார்கள். அதனால்தான் ஒரு கெட்டவன் கூட அவன் கண்ணில்படவில்லை!

எனவே, இவ்வுலகை நாம் பார்க்கும் பார்வைகள் அனைத்துமே

நம் குணத்தை பொறுத்ததுதான்!" என்றான்!

புரிந்ததா என் சொந்தங்களே...?

நல்ல எண்ணம் கொண்டவர்கள் அனைவரையும் நல்லவர்கள் என்று எண்ணி ஏமாந்து போவது இதனால்தான்!

எனவே, கவலை வேண்டாம்... பாரதப்போரில் கடைசியில் வென்றது தருமனே...!

  • 211