பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
அடுத்த வாரம் இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்துரைத்த அவர், யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை எனத் தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னதாக யுக்ரைன் ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்திய டொனால்ட் ட்ரம்ப்பின் தூதுவர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
யுக்ரைன் ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையே விரிவான மற்றும் நேர்மறையான விவாதங்கள் இடம்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் யுக்ரைன் ஜனாதிபதியை 'சர்வாதிகாரி" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருந்த நிலையில், அவரின் தூதுவர் யுக்ரைன் ஜனாதிபதியை 'தைரியமான தலைவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்
- 414