சாவல்கட்டு மகாத்மா சனசமூகநிலையத்தின் (07.03.2025) 75 ஆவது ஆண்டின் பவள விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை வட மாகாண ரீதியில் நடத்தவுள்ளதாக குறித்த நிகழ்வுகளின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து குறித்த நிகழ்வுகளின் ஏற்பட்டுக்குழு இன்றையதினம் (21)யழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தியிருந்தது.
இதன்போது ஏற்பாட்டுக்குழு மேலும் கூறுகையில் -
சாவல்கட்டு மகாத்மா சனசமூகநிலையமானது கடந்த 1950 ஆம் ஆண்டு மக்களை ஒன்றிணைத்து தனது முதல் சமூக சேவையை ஆரம்பித்தது.
இதன் பின்னர் படிப்படியாக தனது கட்டமைப்புக்களை வளர்த்துக்கொண்ட குறித்த சனசமூக நிலையமனது விளையட்டுக்கழகம், முன்பள்ளி மற்றும் பொது மக்களின் கட்டமைப்பு உள்ளிட்ட பல கட்டமைப்புக்களை உருவாக்கி பல நூறு மக்களின் ஒத்துழைப்புடன் பெரும் பரிணாமம் பெற்று பக்களுக்காக பெரும் பங்காற்றியுள்ளது.
இவ்வாறான சமூக செயற்பாகளுடன் தற்போது 75 ஆவது ஆண்டை வரும் மாதம் 07.03.2025 அன்று எட்டவுள்ளது.
இந்நிலையில் பவள விழாவை பிரமண்டமான முறையில் நடத்த ஏற்பாடு செய்யுள்ள நிலையில் தேசிய ரீதியில் பல விளையாட்டு நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்
22.02.2025 அன்று மாலை 6.00 மணிக்கு கரப்பந்தாட்ட போடியும்
28.02.2025 காலை 7 நீச்சல் போடியும்
28.02.2025 பிற்பகல் 3.00 மணிக்கு கயிறு இழுத்தல் நிகழும்,
மரதன் ஓட்ட நிகழ்வு 01.03.2025 காலை 6.00 மணிக்கும், சைக்கிள் ஓட்டம் நிகழ்வுகள் 01.03.2025 காலை 7.30 மணிக்கும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வலிகாமம் பிரதேச ரீதியில் உதைபந்தாட்ட நிகழ்வும், சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இறுதி நிகழ்வுகழ் மார்ச் மாதம் 7 ஆம் திகதியன்று பல்வேறு உயரதிகாரிகள் கல்விப் புலம் சார்ந்தோர் பங்கேற்புடன் நடைபெற உள்ளதாகவும் குறுத்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
இதேவேளை நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர் தமது பதிவுகளை 26.02.2025 முன்னராக
த.ராஜ்குமார் - 0773933179
செ.டுபின்சன் - 0779509975, சி.செந்தூரன் - 0779459078 ஆகியோருடன் தொடர்புகொண்டு மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.
அத்துடன் வெற்றியாளர்களுக்கு வெகுமதியான பணப்பரி சில்களும், கேடயங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த ஏற்பாட்டுக் குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
- 622