நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் வசிக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்தகாயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக்காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்துவாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக்கூறிவிட்டார்.
எம்.ஜி.ஆர். ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத்தாய்க்கு... எம்.ஜி.ஆரை சந்தித்து தன் மகனின் நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார். அந்த தாயின்வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே எம்.ஜி.ஆர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார்.
சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின் கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரின் செலவிலேயே அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் எம்.ஜி.ஆர். உதவி செய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார். நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர்... அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த நெகிழ வைக்கும் பதில் இது...!!! ‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத்தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் தம்பியாக நினைத்துத்தான் உதவிசெய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன். அந்த வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும் அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம்.’’
‘ஆனந்த ஜோதி ' திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘ஒருதாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம்...’ பாடலுக்கு வெறுமனே வாயசைத்து விட்டுப் போனவரல்ல , அதன்படியே வாழ்ந்தவர்... நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல்.
- 436