ஒரு ஊரில் அரசன் வாழ்ந்து வந்தான். அவனு க்கு ஒரு மந்திரி இருந்தான். அரசவையில் மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான்..
அந்த மந்திரிக்கு இரு மகன்கள். ஒருவன் பெயர் பாலன், மற்றவன் பெயர் வேத நெறி - இருவரும் மந்திரியின் சொல்பேச்சை கேட்கா மல் தன்னுடைய இஷ்டம் போல வாழ்பவர்கள் அதனால் வயது வந்த பின் தனது சொத்தை பிரித்து தரும்படி கேட்டுச்சென்றனர்.
அரசனுக்கு மந்திரி மீது மிகவும் பிரியம். அவர் அறிவுத் திறமை குறித்து நன்கு அவரிடம் அன்பு ம் பண்பும் நிறைந்ததாக இருப்பார்.
ஒருநாள் அரசவையில் மந்திரியின் பெருமை கண்டு மாதிரிக்கு அரசன் ஒரு நவரத்தினங்க ளால் செய்யப்பட்ட அழகிய மோதிரத்தை பரிசாக கொடுத்தான். அன்று மந்திரி அந்த மோதிரத்தை வீட்டிற்கு எடுத்து சென்று பத்திர மாக வைத்து கொள் என்று மனைவியிடம் ஆணையிட்டார்.
ஒருநாள் இதை அறிந்து தனது வீட்டிற்கு வந்த வேதநெறி என்ற இரண்டாமவன் வீட்டில் யாருக் கும் தெரியாமல் அந்த மோதிரத்தை எடுத்து திருடி அழகான நாட்டிய பெண்ணுக் கு பரிசளித்தான்,
மறு நாள் அந்த பெண் அரசவையில் அரசன் முன் நடனம் ஆடிகொண்டிருக்கும் வேளையி ல் அவள து கையில் இருந்த மோதிரத்தை பார்த்து அரசனு க்கு மிகவும் அதிர்ச்சி. நாம் மந்திரிக்கு கொடுத்த மோதிரமாச்சே!! இது எப்படி இந்த பெண்ணின் கையில் என்று யோசித்தவாறு மந்திரியை அழைத்து உங்க ளிடம் தந்த அந்த நவரத்தினம் பதித்த மோதி ரத்தை எடுத்து வாருங்கள் என்று ஆணை இட்டான்.
மந்திரியும் வீட்டிற்கு சென்று பார்க்கிறார். மோதி ரம் காணவில்லை என்றவுடனே மந்திரி இல்லை என்ற விபரத்தை கூறியவுடன் அரசன் அந்த பெண்ணிடம் யார் உனக்கு மோதிரத்தை கொடுத் தார்கள் என்று கேட்டவுடன், அவளும் வேதநெறி என்று மந்திரி மகனை சொல்ல அங்கிருந்த மந்திரி தான் மகன் செய்த காரியத்தை நினைத் து மிகவும் வேதனை அடைந்து சில காவலாளிக ளை கூட்டிட்டு மகனை கொல்ல போகிறேன் என்று செல்கிறார். மகன் வேதநெறியும் விஷயம் அறிந்து வேகமாக ஓடுகிறான்.
அன்றுகாலை ஆரம்பித்த ஓட்டம். முடியவில் லை. அன்று சிவராத்திரி தினம். அவன் காலையில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் காவலாளிகளுக்கு பயந்து விட்டு ஓடி கிட்டே இருக்கின்றான். இறுதியில் ஒரு சிவாலயம் வருகிறது.
அங்கு எம்பெருமானார் சிவனுக்கு சில நைவேத் தியங்கள் பக்தர்கள் படைத்தது இருந்தனர். அவன் ஓட்டம் தாங்காமல் ஈசன் கருவறைக்குள் செல்கிறான். ஒரு சிறிய விளக்கு மட்டும் அணை ந்து போகின்ற நிலைமையில் உள்ளது.
அவன் தான் வயிற்று பசி தாங்காமல் அந்த இறைவனின் அறைக்குள் ஏதேனும் நைவேத் தி யம் உண்பதற்காக அந்தவிளக்கை தூண்டி னா ன். தூண்டிய உடன் கோவிலில் இருந்து சிலர் அவனை அடிக்கலானர்.
அவன் சப்தம் கேட்டவுடன் எந்த பிரசாதத்தை யும் சாப்பிடாமல் ஓடத்துவங்கினான். இறுதி யில் பசி தாங்கமுடியாமல் இறந்து போனான். உடனே அவன் இறந்த உடன் எம தூதர்கள் அவனை கூட்டிச்செல்ல ஒருபுறம் வருகின்ற னர். மறுபுறம் கைலாயத்தில் இருந்து எம்பெ ருமானாரால் தேவர்கள் அழைத்துச்செல்ல வருகின்றனர்.
எமதூதர்கள் சரியாக அவனை தொடும் வேளை யில்,தேவர்கள் அந்த வேத நெறியை விட்டு விடு ங்கள். அவன் கைலாயத்தில் சிவபெருமனரால் அழைக்கப் பட்டிருக்கின்றான் என்றவுடன் எமதூ தர்கள் ஏன் எதற்கு என்று வினவினார்கள்.
அதற்கு தேவர்கள் கூறிய பதில்.... அவன் இறந்த நாள் முதலில் சிவராத்திரி. அவன் அன்று பச்சை தண்ணீர் கூட குடிக்க வில்லை..
அவன் ஈசனின் கருவறைக்குள் அணையும் நிலையில் இருந்த விளக்கை தூண்டினான், என்று கூறியவுடன் எமதூதர்கள் தேவர்களிட மே அவனை விட்டுவிட்டனர். அவனும் கைலா யம லையில் ஈசனின் முக்தி பேற்றிற்கு ஆளானான்.
தெரியாமல் நடந்தது வேதநெறியின் செயல் கள் அதற்கே அவனுக்கு முக்தி கிடைத்தது என்றால், நாம் தினமும் கடவுளை மனதை ஒருமுக படுத்தி இறைவனை வழிபட்டால் எந்த அளவு இறைவனி டம் பேரருள் பெற்று முக்திநிலையை அடையலாம்.
- 538