Feed Item
Added a post 

மஹாபாரத யுத்தத்தில் தன்னுடைய தந்தை துரோணாச்சாரியரை ஏமாற்றிக் கொன்றதில் அஸ்வத்தாமன் மிகவும் கோபமடைந்தார். அவர் பாண்டவ சேனை மீது மிக பயங்கரமான ஒரு ஆயுதம் "நாராயண அஸ்த்ரம்" விட்டு விட்டார். இதற்கு மாற்றுபாயம் எதுவுமே கிடையாது. யாருடைய கைகளில் எல்லாம் ஆயுதம் உள்ளது அல்லது யுத்தம் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்களோ அவர்களைப் பார்த்து அவர்கள் மீது அக்னி மழை பொழியும். அவர்கள் அழிந்து விடுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர் சேனைக்கு அவரவர் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு நிற்குமாறு கட்டளையிடுகிறார். மேலும் மனதில் யுத்தம் செய்வதற்கான எண்ணம் கூட வரக் கூடாது இந்த அம்பு அதையும் கண்டறிந்து அவர்களை அழித்து விடும் என்று கூறினார்.

நாராயண அஸ்த்ரம் மெதுமெதுவாக தனது நேரம் முடிந்தவுடன் அமைதி ஆகிவிட்டது. இந்த விதமாக பாண்டவ சேனை காப்பாற்றப் பட்டனர். இதன் உள்கருத்தைப் புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எல்லா இடங்களிலும் யுத்தம் வெற்றி அடைவதில்லை. நம்முன் இருக்கும் கிருமியிடமிருந்து தப்பிக்க கொஞ்ச காலம் அனைத்து வேலையையும் விட்டு விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு மனதில் நல்ல எண்ணம் வைத்து ஓரிடத்தில் அமர்ந்து இருப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். கிருமியை பற்றிய எண்ணம் கூட வரக் கூடாது. அது அதனுடைய நேரம் வரும் போது தானாக மறைந்து விடும் அல்லது அழிந்து விடும். இறைவனால் சொல்லப்பட்ட இந்த உபாயம் வீணாகி விடாது. ஆத்ம தந்தை சிவனை நினைப்போம். இறைவன் நம்முடன் இருக்கும் போது நம் வாழ்வு நன்றாக இருக்கும்.

  • 536