Feed Item
Added a news 

இன்றையதினம் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

00

  • 495