Added a news
இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மகீஷ் தீக்ஷன ஒருநாள் தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மகீஷ் தீக்ஷன முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அத்துடன் குறித்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் இரண்டாவது இடத்திலும், நமீபியா அணியின் பெர்னார்ட் ஷோல்ட்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதேவேளை ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுப்மன் கில் முதலாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இரண்டாம் இடத்திலும், இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா மூன்றாமிடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
- 540