Feed Item
Added a news 

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.

ஆனாலும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, இதே மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த 2021, ஜூலை மாதத்தில் போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். 2023, ஜூலையிலும் அதே மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

000

  • 680