Feed Item
Added a news 

வடமராட்சி கிழக்கு யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (13.02.2025) வியாழக் கிழமை பாடசாலை மைதானத்தில் பி.ப 01.45 மணியளவில் ஆரம்பமானது.

இசைவாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பாடசாலை முதல்வர் கந்தசாமி-சிவனேசன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிராந்தியத்தின் சமுதாய மருத்துவ உத்தியோகத்தரும், பழைய மாணவனுமாகிய வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை சிவநேசன் கலந்து கொண்டதுடன் கெளரவ விருந்தினராக யா/அல்வாய் சிறிலங்கா வித்தியாசாலை ஆசிரியர் திரு.சு.வேலுப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை அதிபர் திரு.பொ.பொன்னம்பலம், ஓய்வு நிலை அதிபர் திரு.வ.நின்மதிராசா, ஆசிரிய ஆலோசகர் திரு.க.பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், வெற்றிக் கோப்பைகளும் விருந்தினர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

  • 909