Feed Item
Added a post 

இரவு நேரக் காவலன் அவன்.

பளபளவென்று விடிந்தபோது பரபரப்பானான்.

ஓடிப்போய் முதலாளியின் அறையைத் தட்டினான்; எழுப்பினான்;

திறந்து நின்றவரிடம் சொன்னான்:

ஐயா.. ...

நீங்கள் இன்றைக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யப் போகிறீர்களா?'

ஆமாம்,

பக்கத்து டவுனுக்குப் போக வேண்டும்.ஏன் கேட்கிறாய்?'

ஐயா...

தயவுசெய்து போகாதீர்கள், அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிப் போவது போல. கெட்ட கனவு கண்டேன். அதிலே நீங்களும் இருந்தீர்கள், ஆகவே போகாதீர்கள்!'

சரி, எதுக்கு வம்பு?'

என்று அவரும் போகவில்லை.

அவன் சொன்னது போலவே... அன்றே அந்த ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து பயணம் செய்த எல்லோருமே பலியாகிப் போனார்கள்.

தன்னைக் காப்பாற்றிய காவலனை உடனே அழைத்தார் முதலாளி. கை நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தார்.

கரம் கூப்பி நன்றி கூறினார்.

அதோடு

ஓர் ஆணையும் இட்டார்:

நாளை முதல்

நீ வேலைக்கு வரவேண்டாம்! உன்னை வேலையிலிருந்து தூக்குகிறேன்!'

அதிர்ச்சியோடு நின்ற காவலனிடம் சொன்னார் முதலாளி: 'அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிப் போவது போல் கனவு கண்டதாகச் சொன்னாய்! இரவு நேரக் காவலன் நீ எப்படித் தூங்கலாம்? இப்படிக் கனவு காணும் அளவுக்கு நீ தூங்கினால், என் உடைமைகளுக்கு ஏது பாதுகாப்பு?'

கறாராய்ச் சொல்லிவிட்டார்.

  • 725