Feed Item
·
Added a post

தெருவோரத்தில் ஒரு வாழைப்பழ வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டிருந்தனர்

அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பசு திடீரென்று அந்த கடையை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். அந்த பசு கடையின் அருகில் வந்து வாழை சீப்புகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்தது.

அருகில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அந்த பசுவை கற்களாலும், கம்புகளாலும் தாக்கத் தொடங்கினர். அந்த பழக்கடையின் உரிமையாளர் பதறிப்போய் மக்கள் அனைவரையும் தடுத்தார். அடிக்காதிங்க அடிக்காதிங்க என்று கத்தினார்.

என்ன ஐயா உங்க பழக்கடைல இருந்து பழங்களை சாபிடுது நீங்க என்னடானா அடிக்க வேண்டாம்னு சொல்லுறீங்க... என்று கேட்டார்கள்.

அது பாவம் பா, வாயில்லா ஜீவன், நமக்கு ஆறறிவு இருக்கு அதனால நம்ம உழைச்சு சாப்பிடுறோம்.. நம்ம அளவுக்கு அதுக்கு அறிவு இல்லாதனால அது இப்படி இருக்கு.

அந்த பசு என்ன பாவம் பண்ணுச்சு, எத்தனை நாள் தான் அதுவும் மேய புல்லு இல்லாம சுவரோட்டிகளையே தின்னுகிட்டு இருக்கும். விடுங்க அது போகட்டும் என்றார் அவர்.

என்ன அய்யா இப்படி சொல்லுறீங்க... அந்த பசு இப்படி சாப்பிட்டா உங்களுக்கு நஷ்டம் வராதானு கேட்டேன். அதற்க்கு அவர் தந்த பதில் அனைவரையும் கலங்கடித்தது.

அந்த பழ வியாபாரி சொன்னார் என்ன பெருசா நஷ்டம் வந்துற போகுது..?

நீங்க பேரம் பேசி என்கிட்ட பழம் வாங்கி நஷ்டப்பட வைக்கிறீங்க.. அந்த நஷ்டத்த விடவா இந்த பசுமாடு எனக்கு நஷ்டம் ஏற்படுத்திட போகுது...?

எங்க ஆத்தாக்கு ஆக்கி போட எனக்கு கொடுத்து வைக்கல.... எங்க ஆத்தாவுக்கு கொடுக்குறதா நெனச்சு இந்த பசுமாட்டுக்கு கொடுக்குறேன் என்றார்...

  • 107