ஒருமுறை சாப்பிட ஒரு உணவகத்துக்கு சென்றார் எழுத்தாளர். சாப்பிட்டு முடித்த பின் பணம் கொடுக்கலாம் என்று தன் பர்ஸை தேட பர்ஸ் காணவில்லை!
என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்க! உணவக உரிமையாளர் ஈவு இரக்கம் இல்லாமல் அவரின் சட்டையை கழட்டி வைத்து விட்டு கிளம்ப சொன்னார். வேறு வழி இல்லாமல் அவர் சட்டையை கழட்டி வைக்க!
உணவக உரிமையாளர் அவரின் வேட்டியையும் கழட்டி வைத்து விட்டு கிளம்ப சொல்ல அதிர்ச்சி அடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்க!
இதை வாசலில் கேட்டு கொண்டு இருந்த ஒருவன்! வேகமா உள்ளே வந்து! சார்! நான் எல்லாம் கேட்டு கொண்டு தான் இருந்தேன் உங்களை எனக்கு தெரியும் சார்! நான் தருகிறேன் காசு! என்று உணவுக்கான காசை கொடுத்து விட்டு வெளியே வர.
எழுத்தாளர் அவருக்கு தன் நன்றியை சொல்ல!
அவனோ கொஞ்சமும் எதிர்பாராமல்! தன் கையில் வைத்து இருந்த பையை திறந்து காட்டி ! சார் இதில் உங்க பர்ஸ் எது என்று பார்த்து எடுத்து கொள்ளுங்க சார்! என்று சொன்னான்.
எழுத்தாளர் பையின் உள்ளே பார்வையிட , அதில் அவருடைய பர்ஸ் இருந்தது, ஆனால் இது தான் தன்னுடையது என்று சொன்னால் அவன் ஐயோ! தெரியாமல் இந்த நல்ல மனிதரிடம் திருடி விட்டோமே என்று வருத்த படுவான் என்று நினைத்த அவர் இல்லை என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
பர்ஸ் திருடன் சற்றே யோசித்தான். அவரின் பர்ஸ் என்று தெரிந்தும் இல்லை என்று சொன்ன அவரின் நல்ல மனது கண்டு இனி வாழ்க்கையில் திருட கூடாது என்று முடிவு செய்து திருந்தினான்..
- 136