தமிழகத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களுக்கு அருகில் உள்ள "ஆவுடையார் கோவில் என்கின்ற திருப்பெருந்துறை". நரியை பரியாக்கி கிடைத்த பணத்தில் மாணிக்கவாசகர் கட்டிய அற்புதமான கோவில். மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றிய இடமும் இதுவே. சிறு வயதில் எங்கள் தந்தை இக்கோவிலுக்கு அழைத்து சென்ற நினைவுகள் பசுமையாக உள்ளது.
விக்கியில் கூறுவது போல "ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோயில் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்".
இக்கோவிலில் சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் இசைத்தூண்களும் உள்ளன.
- 135