பணக்கார தந்தை ஒருவர் அவரது மகனை வெளியூர் கூட்டிச்சென்றார்....
அவரது மகனுக்கு ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.
2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்.
வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார்....
" அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா...? இந்த சுற்றுலா இருந்து என்ன கத்துக்கிட்ட? "
.
மகன் சொன்னான்...
" பாத்தேன்... நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க...
நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்... அவங்க கிட்ட நதி இருக்கு..
இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்... அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு...
சாப்டுறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம்... அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க...
திருடங்க வராமே இருக்க நாம வீடு சுத்தி செவுரு கட்டி இருக்கோம்...
அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க... "
தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்...
" ரொம்ப நன்றி பா .... நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு..."
- 160