மேஷம்
விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். மனை சார்ந்த உதவிகள் சாதகமாகும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சிக்கல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பொழுது போக்கு செயல்களால் விரயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மிதுனம்
உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் ஆதரவுகள் மேம்படும். பணி நிமித்தமான சில நுட்பங்களை அறிவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கடகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான சுப விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமான நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
சிம்மம்
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல்கள் உண்டாகும். மாற்றம் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளியூரில் இருந்துவந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி வரும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த ஆசைகள் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செஞ்சிவப்பு
மகரம்
சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். பணிகளில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். தன வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மீனம்
விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நுட்பமான விஷயங்களில் கவனம் வேண்டும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். மனதளவில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 176