ஒரு மீனவ கிழவன் கடல் மணலில் மீன் பிடிக்கும் வலையை தலைக்கு முட்டு கொடுத்து படுத்து கொண்டு இருந்தார்.
அந்த வழியாக,! வழி போக்கன் ஒருவன் சென்று கொண்டிருந்தான் அப்போது உறங்கி கொண்டு இருந்த கிழவனை எழுப்பி இன்று,,, நீங்க மீன் பிடிக்க கடலுக்குள் போகவில்லையா ன்னு கேட்டான்.
நான் அதிகாலையிலேயே கடலுக்குள் சென்று மீன் பிடித்து விற்று விட்டு தற்போது ஓய்வு எடுத்து கொண்டு இருக்கேன்ன்னு கிழவன் பதில் கூறினார்.
இன்னும் நிறைய பொழுது இருக்கு நிறைய நேரம் இருக்கு மறுபடியும் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கலாமேன்னு அவன் மீண்டும் மீண்டும் கேட்டான்.
நான் மீண்டும் கடலுக்குள் போய் மீன் பிடித்து என்ன ஆக போகிறதுன்னு கிழவன் எதிர் கேள்வியை போட்டார்... நிறைய மீன் பிடித்து நிறைய விலை வைத்து விற்பனை செய்யலாம் நிறைய விற்று!? சொந்தமாக போட் படகுன்னு வாங்கி கடலில் விடலாம் நிறைய பணம் கிடைக்கும் பணத்தை கொண்டு கார் பங்களான்னு நல்லா வசதியாக வாழலாம்ன்னு கிழவனுக்கு ஆலோசனை கூறினான்.
சரிப்பா.... நீங்க சொல்வது போல பங்களா கார் பணம் எல்லாம் வந்து என்ன ஆக போகிறது ன்னு மீண்டும் அதே எதிர் கேள்வியை கொக்கி போட்டார்
வசதி வந்தால் நிம்மதியா தூங்கலாம் ஜாலியா இருக்கலாம் அல்லவான்னு அவன் மறுபடியும் கிழவனுக்கு பதில் கொடுத்து பேசினான்.
நீங்க சொல்ற எதுவுமே இப்ப என்னிடம் இல்லை ஆனாலும் தற்போது நான் நன்றாகவும் நிம்மதியாகவும் தூங்கி கொண்டு தான் இருந்தேன்.
நீ வந்து தான் என் நிம்மதியான தூக்கம் போச்சுன்னு கிழவன் பதில் கூறினார்.
- 416